அகம் புறம் ஒரு பார்வை

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பே ஆலயம்

அதில் வாசம் செய்யும் ஜீவனே சிவன் ஆகும்
என்பதே யோக மார்க்கத்தின் நிலைப்பாடு ,

அதை அறிந்தவர்களே, ஞானிகளும் ,
சித்தர்களும் ஆவர் ,,

தாங்கள் அறிந்த பிரமாண்டத்தையும் ,
உணர்வால் அறிந்த உருவம் இல்லாத
மெய்ப்பொருள் ரகசியத்தையும் அனைவருக்கும்
விளக்கிக்கூற முற்படும்போது ஏற்பட்டதே
உருவ வழிப்பாடும் பக்தி மார்க்கமும் ,

பக்தி மார்க்கம் என்பது ஆன்மீகத்தில்
அரிச்சுவடி ,
யோக மார்க்கம் என்பதே மெய் ஞானத்தின்
திறவுகோல் ,

ஊசி முனையில் தவம்

தவம் என்பது கண்களை மூடி ஆழ்நிலையில்
சலனமில்லாமல் மனதை கொண்டு நிறுத்துவது ,
ஆகும் ,

பஞ்சபூத தத்துவங்களில் மனமானது ஆகாய
தத்துவமாகும் , கருவழியானது வெட்டவெளியாகும் ,

கருவிழியில் மையத்தில் உள்ள நீல புள்ளியில்
ஊசி முனையினைவிட மிக நுண்ணிய துளை
உள்ளது ( ஆதாரம் திருமந்திரப்பாடல் ) இதுதான் வெட்டவெளியின் வாசலாகும் ,

இரண்டு விழிகளின் பார்வையினை
ஒரே புள்ளியில் அதாவது புருவமத்தியில் நிறுத்தி
உற்றுநோக்க ,மனமானது ஆழ்நிலையில் ஒடுங்கும் ,
மனம் ஒடுங்க அதனால் பிராண ஒடுக்கமும் ஏற்படும்

இந்த நிலையே தொடர்ந்து நிகழும்போது
உயிராகிய சீவனை நெற்றிப்பொட்டில் ஒளியாக
தரிசிக்கலாம் ,

பார்வையை ஒரு புள்ளியில் நிறுத்தி தவம்
செய்து ஆன்ம தரிசனம் பெறுவதே !
ஊசிமுனை தவத்தின் மகிமையாகும் .

சிவன் சொத்து குலம் நாசம்

சிவன் கோவில் சொத்துக்களை அழித்தால்
அவனும் ,அவன் வம்சமும் அழிந்துவிடும் என்பதாக
நிலவிவரும் பொதுவான கருத்தாகும் ,

இதன் மறைப்பொருள் என்னவென்றால் ,

அனைத்து படைத்தலுக்கும் காரண
கர்த்தாவாக இருப்பது அந்த பரம்பொருளாகும் ,
அந்த பரம்பொருளை நாம் சிவன் என்றே அழைத்து வழிபடுகின்றோம் ,

அந்த பரம்பொருளின் சிறிய துகள்களே!
சீவன்களாக படைக்கப்பட்ட உயிர்களாகும் ,
ஆக மனிதப்பிறப்பில் காட்சியாக தோன்றும்
அனைவரும் ,அந்த சிவனின் மறு பிம்பங்களே

மனித உடலில் சீவனே சிவனாகவும் ,
சக்தியாகவும் இயக்கம் பெறுகிறது

இங்கே சிவ சொத்துக்கள் என்பது பிராணனும் ,
விந்து சக்தியாகும் ,

ஒருவனின் குலம் என்பது அவனிடமிருந்து
உண்டாகும் பிள்ளைபேறும் ,அதன் தொடர்ச்சியான
சந்ததிகளே !

அரிதான இந்த மானிடப்பிறப்பில் கூன் , குருடு ,
செவிடு , பேடு ,நீங்கி பிறத்தல் என்பது அரிதாகும் ,

ஊனமில்லாமல் பிறத்தல் என்பது அவனிடம்
இயக்கம்பெறும் பிராணன் மற்றும் ,விந்து .சக்தியின்
வீரியத்தையும் பொறுத்தே அமைகிறது ,

சிவனின் சொத்துக்களான , பிராணன் , விந்து ,
இவற்றை விரயம் செய்திருப்பான் என்றால்
அவனிடமிருந்து அந்த வீரியமில்லாத பிராணன்
மற்றும் விந்து ஆற்றலால் ஊனமுள்ள பிள்ளைகள்
பிறந்து அவனின் குலம் நாசமாகும்

இமயத்தில் இருக்கும் ஈசன்

இமயத்தில் சிவன் , சக்தியோடு
உறைந்திருக்கிறார் என்பதாக புராணங்கள்
உரைக்கின்றது ,

ஏகன் ,அநேகனாக இருப்பது எல்லாம் சிவனே !
அந்த சிவனே , தாயுமாகி ,தந்தையுமாகி அனைத்து
உயிரிகளிலும் வாசம் செய்கிறான் ,

அதனை அறியும் அறிவு மனிதனுக்கு
மட்டுமே உண்டு அப்படி அறிந்து சொல்லியதே
சிவன் சக்தியோடு இமயத்தில் வாசம் செய்கிறான்
என்பதாகும் ,

இமயம் என்பது ஆகாய தத்துவமாக விளங்கும்
ஆங்ஞா என்ற மையப்பகுதியாகும் ,

இரு கண் இமைகளும் இணையும்
மையப்பகுதியிலான நுனிமூக்கு பகுதியே
இமையமேருவாகும் ,

இங்கே இறைவனை சிவசக்தி சொரூபமாக
( ஒலியும் ஒளியும் ) கண்டு களித்த ஞானிகளும் ,
சித்தர்களும் இமயத்தில் சிவன் சக்தியோடு
உறைந்திருக்கிறார் என்றார்கள் ,

நதி நீராடுதலும் , பதினெட்டுப்படியும்

நதியில் நீராடி , பதினெட்டுப்படிகள் ஏறியே
மணிகண்டனை தரிசனம் செய்யமுடியும் என்பது
புற வழிப்பாட்டின் கோட்பாடுகள் , பக்தர்களின்
நிலைப்பாடும் அதுவே ,

யோக மார்க்கத்தில் ஐயனை தரிசனம் செய்யும்
நிலைப்படும் அதுவே ,

இறைவன் படைப்பில் எந்த உயிரினத்திற்கும்
இல்லாத ஒன்று ,மனிதனுக்கு உண்டு ,

ஒன்று மனம் என்னும் ஆறாவது அறிவு ,
மற்றொன்று நிமிர்ந்து நிற்கும் முதுகு தண்டு ,

இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே
இறைவனை அறியும் யோக மார்க்கத்தை கண்டறிந்து
அதில் வெற்றியும் அடைந்து ,சித்தர்கள் ,ஞானிகள்
என்ற மேன்மை நிலையினை அடைந்தார்கள் ,

மூலாதாரமென்னும் முதுகு தண்டின்
அடிப்பகுதியான ஜீவ நீர் வீற்றிருக்கும் சக்தி
மையத்தின் இருப்பு நிலையில் ,மனதை நிறுத்தி
செங்குத்தாக இருக்கும் முதுகு தண்டில் மேலேற்றி
பதினெட்டு படிநிலைகளை கடந்து கண்டத்தின்
மேலேறி நின்றாலே மணிகண்டனை தரிசனம்
செய்யலாம் என்பது யோக மார்க்கத்தின் ரகசியம் .

கொடிமர தரிசனம்

கோவில்களில் நுழைவில் இருக்கும்
கொடிமரமானது அது உயர்ந்து நிற்கும்
தன்மையினைபோன்று மனிதர்களின்
ஆன்மீகப்பாதையின் தடத்தை மேல் நோக்கி
கொண்டு செல்லும் மார்க்கத்தை காட்டுவதாகும் ,

கொடிமரத்தை மேல் நோக்கி பார்த்து
தொழுதப்பிறகே மூலவரை தரிசனம் செய்யும்
முறையானது இன்றுவரை பக்தி மார்க்கத்தில்
இருந்து வருகிறது ,

நிமிர்ந்து நின்று பார்வையினை மேல்நோக்கி
கொடி மரத்தினை பார்க்கும்போது கழுத்து சற்று
பின்னோக்கும் ,அதனால் முதுகு தண்டு நிமிர்ந்து
செங்குத்தான நிலையினை அடையும் ,

இந்த நிலையில் மார்பு விரிந்து சுவாச
உறுப்புகளுக்கு தேவையான இடைவெளி கிடைத்து
சுவாசம் அதிகரிக்கும் ,

இதனால் மூலாதாரத்தில் அசைவு ஏற்பட்டு
ஆதார சக்கரங்களின் இயக்கம் தூண்டப்படும் ,

கொடிvமரத்தின் தத்துவம்

கொடி மரத்தின் வடிவமைப்பு என்பது நமது
முதுகு தண்டினை ஒத்தே அமைக்கப்பட்டிருக்கும் ,

அதன் செங்குத்தான நிலையும் , அதில்
அமைக்கப்பட்டிருக்கும் பதினெட்டு படி சுற்றுக்களும்
முதுகு தண்டில் உள்ள பதினெட்டு சுற்று ( spine disk )
எலும்புகளாகும் ,

ஜீவனுக்கு ஆதாரமான ஜீவ சக்தியானது
மூலாதாரத்திலிருந்து ஆறு ஆதாரத்தில் நிலைத்து
பதினெட்டு படிநிலைகளை கடந்து மேலேறினால்
சிவ தரிசனம் காணலாம் என்பதை காட்டுவதே
கொடிமரத்தின் தத்துவமாகும் .

ஆக தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகள் என்றென்றும் போற்றத்தக்கதும் , வணங்கத்தக்கதுமாகும்

Similar Posts