ஆன்மிகம் என்பது இறைவன் இருப்பிடம்
ஆன்மிகம் என்பது இறைவன் இருப்பிடம் நோக்கி பயணம் , அதற்க்கு முறையான பயிற்சி அவசியம்
உடம்பில் இருக்கும் உயிர் ஆன்மாவால் இயக்கப்படுகிறது . எதில் எது உற்பத்தி ஆனதோ அதில் சென்று கலக்கும் அல்லது முடிவுறும் . மண்ணால் உற்பத்தி ஆன உடல் மண்ணில் சென்று மறையும் .
பஞ்ச பூதங்களால் உண்டான நுண் உடல் உயிர் சக்தியால் பஞ்சபூதங்களால் இயக்கப் பட்டு வருகிறது . உயிர் சக்தி இல்லாதபோது பஞ்சபூதங்கள் உடலை விட்டு ஒரு நிலையில் வெளியேறுகிறது பின்னர் அது பிணம் என்றாகிறது . விண்ணில் இருந்து வந்த உயிர் விண்ணில் சென்று கலந்து விடுகிறது , விண்ணில் இருக்கும் உயிர் உடல் எடுத்தவுடன் மிளிர்வதையும் இறந்துடன் மறைவதையும் பார்க்க முடியும் .
இவை இரண்டும் கண்களால் பார்க்க முடியும் . ஆனால் ஆன்மா என்ற இறை சக்தி உயிர் எடுக்கும் விதமும் உயிரானது உடம்பு எடுக்கும் விதமும் உடம்பில் இருந்து பிராணன் என்ற ஆன்மா பிரியும் விதத்தை மட்டும் இறைவன் மறைவாக வைத்தான், அதாவது தாயின் கெர்ப்பத்தில் குழந்தை உருவான விதம் , வளர்ச்சி அடைந்த உடன் உலகில் வந்த விதம் .மண்ணுலகில் தான் இருந்த உடலை விட்டுவிட்டு பிரிந்த காரணம் மறைபொருளாக இறைவன் வைத்து உள்ளான்
இதை ஆன்மீகப் பாதை உணரவைக்கும்