காயத்திரி மந்திரம் தமிழ்
காயந்திரி மந்தரம் ≠ காயத்ரீ மகாமந்த்ரம்
‘காயம் + திரி + மந்திரம் = காயந்திரி மந்திரம்’ என்ற பேருண்மை தெரியாததால் தமிழர்கள், ஆரியர்களுக்குரிய வடமொழி ‘சமசுக்கிருதம்’ மந்திரமே ‘காயத்திரி மந்திரம்’ என்று தவறாகக் கருதுகிறார்கள். இது தவறு.
“மெய் உய்ய, மெய்யும் உயிரும் வாய்மை பெற, பத்தி சத்தி சித்தி முத்தி எனும் நான்கு நிலைகளைப் பெற்றிட, அச்சம் இச்சை கூச்சம் மாச்சரியம் எனும் நான்கும் வாழ்வை நலிவடையாமல் காத்திடக் காயந்திரி மந்திரம் காலை மாலை இருவேளை கூறப்படல் வேண்டும்….” என்று குருபாரம்பரியம் மிகத் தெளிவாகக் காயத்திரி மந்திரம் பற்றிக் கூறுகிறது.
பன்னெடுங் காலமாகச் சித்தர்களின் விந்துவழி வாரிசுகளன்றிப் பிறர் அறிய முடியாது இருந்த ‘கருவறை உயிர்ப்பு மந்திறம்’, ‘கட்டு மந்திறம்’, ‘ஐந்தீ வேட்டம் தோத்திறம்’ …. முதலியவைகளை யாம் இப்போது நம்மவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி, வளர்ச்சி…. எனப் பாராட்டப் படுகிறது.
‘காயத்திரி மந்தரம்’ என்று சமசுக்கிருதத்தில் கூறப்பட்டு வருவதைத் தவிர்த்து தமிழில் உள்ள இம்மந்தரத்தை அனைவரும் நாடு, மொழி, இன, மத …. வேறுபாடின்றி உடனடியாகப் பயன்படுத்தித் தங்களை அமைதியான, அறிவான, இளமையான, இனிமையான …. வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டு சிறக்கும்படி வேண்டுகிறோம். தமிழில் உள்ள மந்திறங்கள்தான் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு உரியன என்றில்லாமல் அனைவரும் பயன்படுத்தக் கூடிய விதத்தில் பதினெண் சித்தர்கள் படைத்துள்ளனர்.
‘ஓம் பூர்வ புலன்கள் சுவை ஆகுக.!
தத்துவ வித்துக்குள் அரணாகுக.!
பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!’