மகா சிவராத்திரி ஆன்மீகமும் அறிவியலும்
சிவராத்திரி ரகசியம்-27 (சிவ பித்தர்கள் எனக்கு சொன்ன சிவ ரகசியங்கள்) சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்கவேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்த பிறகு, சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்து திரும்ப வேண்டும். சிவராத்திரி புண்ணிய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். ஓவ்வொரு கால பூஜைக்கும் சில குறிப்பிட்ட நியதிகள் இருக்கின்றன சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும். நான்கு கால பூஜைகள்: சிவராத்திரி புண்ணிய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். ஓவ்வொரு கால பூஜைக்கும் சில குறிப்பிட்ட நியதிகள் இருக்கின்றன . சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய சிறப்பான அபிஷேக, அலங்காரம், நிவேதனம் ஆகியவற்றை சிவாகமங்களில் சிவபெருமானே பார்வதி தேவிக்கு கூறியுள்ளார். அதன்படி சிவ வழிபாடு செய்வது நலம்பயக்கும். முதல் காலம்: அபிஷேகம் – பஞ்சகவ்யம். மேற்பூச்சு – சந்தனம். வஸ்திரம்-பட்டு. ஆடையின் வண்ணம் – சிவப்பு, நிவேதனம் – காய்கறிகள், அன்னம். வேதம் – ரிக். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது – சிவபுராணம். தீபம் – விளக்கெண்ணெய். தத்வ தீபம் – ரதாரத்தி. அட்சதை – அரிசி. மலர் – தாமரை. பழம் – வில்வ பழம். ரிக்வேதம் மற்றும் சிவபுராணம் பாராயணம் செய்யலாம். இரண்டாம் காலம்: ** அபிஷேகம் – பஞ்சாமிர்தம். மேற்பூச்சு – பச்சைக்கற்பூரம். வஸ்திரம் – பருத்தி. ஆடையின் வண்ணம் – மஞ்சள், நிவேதனம் – பரமான்னம், லட்டு. வேதம் – யஜூர். திருமுறை பஞ்ச புராணத்துடன் பாட வேண்டியது – இருநிலனாய்… பதிகம். தீபம் – இலுப்பை எண்ணெய். தத்வ தீபம் – ஏக தீபம். அட்சதை – யவை. மலர்கள் – தாமரை, வில்வம். பழங்கள் – பலாப்பழம். பாராயணம்: யஜுர் வேத பாராயணமும் எட்டாம் திருமுறையில் கீர்த்தித் திருவகவலும் பாராயணம் செய்யலாம் . மூன்றாம் காலம்: * அபிஷேகம்- தேன். மேற்பூச்சு – அகில். வஸ்திரம் – கம்பளி. ஆடையின் வண்ணம் – வெள்ளை, நிவேதனம் – மாவு, நெய் சேர்த்த பலகாரங்கள், பாயசம். வேதம் – சாமம். திருமுறை பஞ்ச புராணத்துடன் – லிங்கபுராண குறுந்தொகை. தீபம் – நெய். தத்வ தீபம் – கும்ப தீபம். அட்சதை – கோதுமை. மலர்கள் – அறுகு, தாழம்பூ. பழங்கள் – மாதுளை. சாம வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாவது திருமுறையில் திருவண்டகப் பகுதி பாராயணம் செய்யலாம். நான்காம் காலம் : அபிஷேகம் – கருப்பஞ்சாறு. மேற்பூச்சு – கஸ்தூரி. வஸ்திரம் – மலர் ஆடை. ஆடையின் வண்ணம் – பச்சை. நிவேதனம்– கோதுமை, சர்க்கரை, நெய் கலந்த பலகாரங்கள். வேதம் – அதர்வணம். திருமுறை பஞ்ச புராணத்துடன் – போற்றித் திருத்தாண்டகம். தீபம் – நல்லெண்ணெய். தத்வ தீபம் – மகாமேரு தீபம். அட்சதை – உளுந்து, பயறு முதலான ஏழு தானியங்கள். மலர்கள் – எல்லா வகை மலர்களாலும். பழங்கள் – வாழை முதலிய அனைத்து வகைப்பழங்களும். அதர்வண வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்யவேண்டும். மகாதேவ ரகசியங்கள் தொடரும்…… – சித்தர்களின் குரல் shiva shangar